கொலை வழக்கில் 13 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கேரளாவில் கைது


கொலை வழக்கில்   13 ஆண்டுகள் தலைமறைவாக  இருந்தவர் கேரளாவில் கைது
x

கொலை வழக்கில் 13 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கேரளாவில் கைது

கன்னியாகுமரி

கருங்கல்,

கருங்கல் அருகே ஐரேனிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜான் சதீஷ் குமார். இவரை அதே பகுதியை சேர்ந்த மரிய அந்தோணி என்ற தாசன் (53) உள்பட 3 பேர் முன்விரோதம் காரணமாக 2009-ம் ஆண்டு கொலை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாசன் என்பவரை சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளியே வந்த தாசன் 13 ஆண்டுகளாக தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்போஸ்கோ தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அவர்கள் திருவனந்தபுரம் சென்று அங்கு பதுங்கி இருந்த தாசனை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story