சென்னிமலை பகுதியில் தார்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு


சென்னிமலை பகுதியில் தார்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்  பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு
x

சென்னிமலை பகுதியில் தார்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுத்தனா்.

ஈரோடு

சென்னிமலை பகுதியில் தார்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

மருத்துவ ஊழியர்கள்

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தினர் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:-

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் 296 பேர் பணியமர்த்தப்பட்டனர்.

தற்சமயம் இதில் காலியிடங்களும் உருவாகியுள்ளன. எங்களை பணியில் அமர்த்தும்போது வழங்குவதாக கூறப்பட்ட அடையாள அட்டை, சீருடை, செல்போன் ரீசார்ஜ் தொகை, பயணப்படி, பேறுகால விடுப்பு, பண்டிகை கால போனஸ், நிலுவையில் உள்ள ஊக்கத் தொகை ரூ.2,000 ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில், மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தார்ரோடு

சென்னிமலை அருகே உள்ள வாய்ப்பாடி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முன்னாள் ஊராட்சி துணைத்தலைவர் நக்கீரன் தலைமையில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-

வாய்ப்பாடி கிராமம் சுள்ளிமேடு பகுதியில் இருந்து எல்லக்காடு வரை தார் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் 6 மாதம் ஆகியும் பணிகள் இன்னும் முடிக்கப்படவில்லை. இதனால் பள்ளிக்கூட வாகனம் மற்றும் பள்ளிக்கூட, கல்லூரி மாணவ -மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் இந்த ரோடு காசிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் பிரதான ரோடாகவும் உள்ளது. எனவே தார் ரோடு பணியை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.

427 மனுக்கள்

இதேபோல் மொத்தம் 427 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் ராஜகோபால், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கோதை செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story