சிதம்பரத்தில் 2 தனியார் நிறுவனங்களில் கொள்ளை


சிதம்பரத்தில் 2 தனியார் நிறுவனங்களில் கொள்ளை
x

சிதம்பரத்தில் 2 தனியார் நிறுவனங்களில் கொள்ளையடிக்கப்பட்டது தொடா்பாக போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலூர்

சிதம்பரம்,

சிதம்பரம் வி.எஸ்.ஆர். நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் துரைமுருகன் (வயது 30). இவர் சிதம்பரம் வடக்கு வீதியில் தனியார் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். துரைமுருகன், தனது நிறுவனத்தை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் காலையில் வந்து பார்த்தபோது, நிறுவனத்தின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, கடையில் இருந்த லேப்டாப், பென் டிரைவர், ஐ பாட், ரூ.1,500 ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. அவற்றை யாரோ கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

இதேபோல் அதன் அருகே சின்ன செட்டி தெருவை சேர்ந்த முரளி என்பவர் நடத்தி வரும், மற்றொரு தனியார் கட்டுமான நிறுவனத்தின் ஷட்டர் பூட்டையும் மர்மநபர்கள் உடைத்து அதில் இருந்த லேப்டாப், ரூ.300 ரொக்கம் ஆகியவற்றை திருடிச்சென்றனர். இதேபோல் அதன் அருகே டிராவல்ஸ் கடை ஷட்டரையும் உடைத்த மர்மநபர்கள் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.7 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story