சிதம்பரத்தில் குழந்தை திருமணம்; 2 தீட்சிதர்கள் கைது


சிதம்பரத்தில்  குழந்தை திருமணம்; 2 தீட்சிதர்கள் கைது
x
தினத்தந்தி 17 Oct 2022 12:15 AM IST (Updated: 17 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் குழந்தை திருமணம் நடந்தது தொடர்பாக 2 தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடலூர்

சிதம்பரம்,

சிதம்பரம் கீழவீதியை சேர்ந்தவர் ஹேம சபேசன் தீட்சிதர்(வயது 42). இவர் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் செயலாளராக உள்ளார். இவருடைய மகளான 16 வயது சிறுமிக்கும், கீழ சன்னதியை சேர்ந்த வெங்கடேஸ்வரன் மகன் ராஜரத்தினத்திற்கும்(19) கடந்த 25-1-2021 அன்று திருமணம் நடைபெற்றதாக சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதுபற்றி சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமை துறை அலுவலர் மீனா சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து அனைத்து மகளிர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமிக்கு திருமணம் நடந்தது உறுதியானது. இதையடுத்து சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தை திருமணம் நடத்திய சிறுமியின் தந்தை ஹேம சபேசன், வெங்கடேஸ்வரன் தீட்சிதர்(43) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.


Next Story