உடன்குடி அருகேயுள்ள சிதம்பரபுரத்தில் ஒரு மாதமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை கண்டித்து காலிகுடங்களை நடுதெருவில் வைத்து பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்


உடன்குடி அருகேயுள்ள சிதம்பரபுரத்தில் ஒரு மாதமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை கண்டித்து காலிகுடங்களை நடுதெருவில் வைத்து பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
x
தினத்தந்தி 17 Oct 2023 12:15 AM IST (Updated: 17 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடி அருகேயுள்ள சிதம்பரபுரத்தில் ஒரு மாதமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை கண்டித்து காலிகுடங்களை நடுதெருவில் வைத்து பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி அருகேயுள்ள சிதம்பரபுரத்தில் ஒரு மாதமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை கண்டித்து காலிகுடங்களை நடுதெருவில் வைத்து பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இப்பகுதியில் ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு விற்கப்படுகிறது.

ஆர்ப்பாட்டம்

உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட மானாடு தண்டுபத்து ஊராட்சி சிதம்பரபுரத்தில் சுமார் ஒருமாத காலமாக தாமிரபரணி கூட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இப்பகுதியில் ஒரு மாதமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தனியாரிடம் அதிக விலை கொடுத்து குடிநீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த கிராமமக்கள் நேற்று காலையில் காலிகுடங்களை நடுத் தெருவில் அடுக்கி வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, 'குடிநீர் வேண்டும்' 'குடிநீர் வேண்டும்' என்று சுமார் ஒரு மணி நேரம் கோஷம் எழுப்பினர்.

ஒரு குடம் ரூ.10-க்கு விற்பனை

அப்போது அவர் கூறுகையில், கடந்த ஒரு மாதமாக எங்கள் ஊருக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் கிராமத்து பெண்கள் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று, தண்டுபத்து அல்லது மானாடு ஆகிய ஊர்களுக்கு சென்று தண்ணீர் எடுத்து தலையில் சுமந்து வருகிறோம். சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் ெதரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இன்று குடிநீர் கேட்டு போராட்டம் நடத்தியும், எந்த அதிகாரியும் வந்து குறை கேட்கவில்லை. ஒரு குடம் குடிநீரை ரூ.10விலை கொடுத்து வாங்கி வருகிறோம். சமீபத்தில் நடந்த கிராம சபை கூட்டத்திலும் காலி குடங்களுடன் ெசன்று முறையிட்டோம். ஒரிரு நாட்களில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மாவட்ட கலெக்டர் தனிக்கவனம் செலுத்தி எங்களுக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story