சின்னசேலத்தில் மனித சங்கிலி போராட்டம்
சின்னசேலத்தில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
சின்னசேலம்
சின்னசேலம் ஒன்றியம், நகரம், வடக்கனந்தல் நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சின்னசேலத்தில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் குபேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் பழனிசாமி, சக்திவேல், நகர செயலாளர் சாரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ்நாட்டின் அமைதியை கெடுத்து வன்முறையை தூண்டி சாதி, மத அடிப்படையில் மக்களை பிளவு படுத்தி அரசியல் செய்ய முற்படும் சக்திகளை விட மாட்டோம், சனாதான பயங்கரவாதத்தை முறியடிப்போம், கல்வியை காவி மயமாக்குவதை தடுப்போம் போன்ற கோஷங்களை எழுப்பியவாறு சின்னசேலம் பஸ் நிலையத்தில் இருந்து சேலம் மெயின் ரோடு வரை மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ், விடுதலை சிறுத்தை மாநில துணை செயலாளர் பாசறைபாலு, சங்கராபுரம் தொகுதி செயலாளர் அம்பிகாபதி, மாவட்ட செய்தி தொடர்பாளர் அனிச்சமலரவன், எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் பிரபு, மார்க்சிஸ்ட் கட்சி மாரிமுத்து மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் ஜான் பாஷா மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.