கோவையில் பிளஸ்-2 பொதுத்தோ்வை 35,827 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்
கோவையில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கும் பிளஸ்-2 பொதுத்தேர்வை 35,827 மாணவ-மாணவிகள் 128 மையங்களில் எழுதுகிறார்கள். இதில் முறைகேடுகளை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது.
கோவையில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கும் பிளஸ்-2 பொதுத்தேர்வை 35,827 மாணவ-மாணவிகள் 128 மையங்களில் எழுதுகிறார்கள். இதில் முறைகேடுகளை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது.
பிளஸ்-2 பொதுத்தேர்வு
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந் தேதி வரை நடக்கிறது.
கோவை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பூபதி தலைமை யில் கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 360 பள்ளிகளை சேர்ந்த 16,661 மாணவர்கள், 19,166 மாணவிகள் என மொத்தம் 35,827 பேர் எழுதுகிறார்கள்.
தனித்தேர்வர்களுக்கு 6 தேர்வு மையங்கள் உள்பட மொத்தம் 128 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
தேர்வு அறைகளில் இருக்கைகளில் மாணவ-மாணவிகளின் நுழைவுச்சீட்டு எண்களை எழுதப்பட்டன.
மாணவ-மாணவிகள் தேர்வு அறைகளுக்கு செல்ல வசதியாக தகவல் பலகையில் அறை எண், ஹால்டிக்கெட் எண், தேர்வு தேதி ஆகியவை அடங்கிய நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது.
செல்போன் எடுத்துவர தடை
தேர்வு மையங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. அங்கு மின்சாரம், கழிவறை போன்ற அடிப்படை வசதி செய்யப்பட்டு உள்ளது.
தேர்வில் முறைகேடு நடக்காமல் கண்காணிக்க 180 போ் கொண்ட பறக்கும் படை, 128 நிலையான படை அமைக்கப்பட்டு உள்ளது.
௧
38 தேர்வு மைய முதன்மை கண்கா ணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்வு மையங்களுக்கு செல்ல பஸ் வசதி செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தேர்வானது காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடக்கிறது. தோ்வு எழுத வரும் மாணவ-மாணவிகள் கட்டாயம் ஹால்டிக்கெட் எடுத்து வரவேண்டும்.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செல்போன் கொண்டு வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதை மீறி ெகாண்டு வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிளஸ்-1 பொதுத்தேர்வு
பிளஸ்-1 பொதுத்தேர்வு நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது.
கோவை மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 15,630 மாணவர்கள், 18,760 மாணவிகள் என மொத்தம் 34,390 பேர் எழுத உள்ளனர். இதற்காக 128 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.