கோவையில் 94.63 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி


கோவையில் 94.63 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி
x

கோவை மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 94.63 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம் மாநில அளவில் 5-வது இடம் கிடைத்தது

கோயம்புத்தூர்

கோவை

கோவை மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 94.63 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம் மாநில அளவில் 5-வது இடம் கிடைத்தது.

பிளஸ்-1 தேர்வு முடிவு

தமிழகத்தில் கடந்த மாதம் பிளஸ்-1 பொதுத்தேர்வு நடைபெற்றது. இதில், கோவை மாவட்டத்தில் உள்ள 365 மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்பு படித்த 16 ஆயிரத்து 631 மாணவர்கள், 18 ஆயிரத்து 949 மாணவிகள் என மொத்தம் 35 ஆயிரத்து 580 பேர் பொதுத்தேர்வு எழுதினர்.

இதையடுத்து பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு நேற்று அறிவிக்கப்பட்டது. தேர்வு முடிவுகள் அந்தந்த பள்ளிகளின் அறிவிப்பு பலகைகளில் த ஒட்டப்பட்டு இருந்தன.

அதை மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பார்த்து தங்களின் மதிப்பெண்களை தெரிந்து கொண்டனர். அதிக மதிப்பெண் எடுத்த மாணவ-மாணவிகளை பள்ளி ஆசிரிய- ஆசிரியைகள் பாராட்டினர்.

5-வது இடம் பிடித்த கோவை

கோவை மாவட்டத்தில் 15 ஆயிரத்து 222 மாணவர்கள், 18 ஆயிரத்து 448 மாணவிகள் என 33 ஆயிரத்து 670 பேர் பிளஸ்-1 தேர்வில் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 91.53 சதவீதமும், மாணவிகள் 97.36 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர். இது 94.63 சதவீத தேர்ச்சி ஆகும்.

இதன் மூலம் தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் கோவை மாவட்டம் 5-வது இடம் பிடித்து உள்ளது. கொ ரோனா அச்சம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பிளஸ்-1 தேர்வு நடத்தப்படவில்லை.

2019-ம் ஆண்டு நடைபெற்ற பிளஸ்-1 பொதுத்தேர்வில் கோவை மாவட்டம் 97.67 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 2-வது இடம் பிடித்திருந்தது.

ஆனால் நடப்பு ஆண்டில் மாநில அளவில் 5-வது இடம் பிடித்து உள்ளது. தேர்ச்சி விகிதம் குறைந்தது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story