கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில்ஒரே பாடத்திட்ட கொள்கையை திரும்ப பெறும் வரை தொடர் போராட்டம்- பேராசிரியர்கள் சங்க கூட்டு நடவடிக்கை குழு அறிவிப்பு


கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில்ஒரே பாடத்திட்ட கொள்கையை  திரும்ப பெறும் வரை தொடர் போராட்டம்- பேராசிரியர்கள் சங்க கூட்டு நடவடிக்கை குழு அறிவிப்பு
x
தினத்தந்தி 20 July 2023 2:44 AM IST (Updated: 20 July 2023 3:51 PM IST)
t-max-icont-min-icon

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஒரே பாடத்திட்ட கொள்கையை திரும்ப பெறும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என பேராசிரியர்கள் சங்க கூட்டு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது.

மதுரை


கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஒரே பாடத்திட்ட கொள்கையை திரும்ப பெறும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என பேராசிரியர்கள் சங்க கூட்டு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது.

ஒரே பாடத்திட்டம்

தமிழக பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம், அரசுக்கல்லூரி ஆசிரியர்கள் சங்கம், மதுரை காமராஜர், மனோன்மணியம் சுந்தரனார், அன்னை தெரசா, அழகப்பா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் இணைந்து கல்லூரி ஆசிரியர்களுக்கான கூட்டு நடவடிக்கை குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் மதுரை மூட்டா அலுவலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக உயர்கல்வி மன்றம் (டான்ஸ்கி) அறிவுறுத்தியுள்ளது. இந்த திட்டம் பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி உரிமையை பறிப்பதுடன், தரமற்றதாகவும் உள்ளது.

திரும்ப பெற வேண்டும்

வளர்ந்த நாடுகளில் ஒரே பாடத்திட்டம் என்ற நடைமுறை இல்லை. தமிழ், ஆங்கிலம் என மொழிப்பாடங்களிலும் ஒரே பாடத்திட்டம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த முடிவை எடுப்பதற்கு முன்னதாக அது தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தை தமிழக அரசோ, தமிழக உயர்கல்வி மன்றமோ நடத்தவில்லை.

3 வருடத்துக்கு ஒரு முறை உயர்கல்வி மன்றம் பாடத்திட்டம் தயாரித்து கொடுக்குமா, அப்படியெனில் பல்கலைக்கழகங்களில் உள்ள சுமார் 500-க்கும் மேற்பட்ட பாடத்திட்டக்குழுக்களின் நிலை என்ன என்பது தெரியாததால் இந்த திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இது குறித்து உயர்கல்வி மன்றத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர் செயலர் ஆகியோருடன் கூட்டு நடவடிக்கை குழு பிரதிநிதிகள் சந்திப்பு கூட்டம் கடந்த 12-ந் தேதி நடந்தது.

தொடர் போராட்டம்

அப்போது, பல்கலைக்கழகங்களுக்கு மாதிரி பாடத்திட்டம் மட்டும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகம் அதனை ஏற்றுக்கொள்ளலாம் அல்லது மறுக்கலாம். மேலும், அந்தந்த பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டக்குழு முடிவெடுக்கலாம் என்று உயர்கல்வி மன்ற துணைத்தலைவர் தெரிவித்தார். இந்த நிலையில், பேச்சுவார்த்தைக்கு முற்றிலும் மாறுபட்ட வகையில், உண்மைக்கு புறம்பாக தமிழகத்தில் ஒரே பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டு விட்டது. இதற்கு கல்வியாளர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளதாக மாநில உயர்கல்வி மன்றம் அறிக்கை வெளியிட்டது.

எனவே, மாதிரி பாடத்திட்டம் என்ற முகமூடியில் அனைவர் மீதும் திணிக்கப்பட்டுள்ள பொதுப்பாடத்திட்டத்தை திரும்ப பெற வேண்டும். அது வரை தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story