குன்னூரில், 108 விநாயகர் சிலை ஊர்வலம்


குன்னூரில், 108 விநாயகர் சிலை ஊர்வலம்
x
தினத்தந்தி 23 Sept 2023 12:15 AM IST (Updated: 23 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குன்னூரில், 108 விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றன.

நீலகிரி

குன்னூர்: குன்னூரில் பல்வேறு இடங்களிலும் இந்து முன்னணி சார்பில் 108 விநாயகர் சிலைகள் கடந்த 18-ந்தேதி வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பக்தர்கள் வழிபாடு நடத்தி தரிசனம் செய்தனர். மேலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்தநிலையில் குன்னூரில் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்ட 108 விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. அதன்படி மேளதாளம் முழங்க பக்தர்கள் ஆரவார கோஷத்துடன் வாகனங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக பெட்போர்டு, மவுண்ட் ரோடு, பஸ் நிலையம் வழியாக கொண்டு செல்லப்பட்டது.

இந்த ஊர்வலத்தில் பக்தர் ஒருவர் அலகு குத்தி பறவைக்காவடியாக வாகனத்தில் வந்தார். பின்னர் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள லாஸ் பால்ஸ் அருவிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பலத்த போலீசார் பாதுகாப்புடன் பிரதிஷ்டை செய்யப்பட்ட 108 விநாயகர் சிலைகளும் கரைக்கப்பட்டன.


Next Story