கூடலூர் பகுதியில்முட்டைக்கோஸ் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்


கூடலூர் பகுதியில்முட்டைக்கோஸ் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
x
தினத்தந்தி 17 April 2023 6:45 PM GMT (Updated: 17 April 2023 6:46 PM GMT)

கூடலூர் பகுதியில் முட்டைக்கோஸ் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தேனி

கூடலூர் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தையொட்டிய கழுதைமேடு, பெருமாள் கோவில் புலம், காக்கான் ஓடை, காஞ்சிமரத்துறை, வெட்டுக்காடு ஆகிய பகுதிகளில் தோட்ட விவசாயிகள் கடந்த பங்குனி மாதம் முட்டைக்கோஸ் சாகுபடி செய்திருந்தனர். முட்டைக்கோஸ் பயிர் சாகுபடி செய்யப்பட்ட நாளில் இருந்து 90 முதல் 100 நாட்களில் மகசூல் கிடைக்கும். தற்போது இந்த பகுதிகளில் முட்டைக்கோஸ் பயிர் சாகுபடி செய்யப்பட்டு 40 நாட்கள் ஆகி உள்ள நிலையில் அவை நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது. குறைந்த காலத்தில் நல்ல மகசூல் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்து உள்ளனர். முட்டைக்கோசை உள்ளூர் வியாபாரிகள் மற்றும் வாரச்சந்தை வியாபாரிகள் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து வருகின்றனர். சில விவசாயிகளிடம், வியாபாரிகள் ஒப்பந்த அடிப்படையில் சீசன் முடியும் வரை மொத்த பணத்தை கொடுத்துவிட்டு முட்டைக்கோசை அறுவடை செய்கின்றனர். அறுவடை செய்யப்பட்ட முட்டைக் கோசுகள் பிளாஸ்டிக் பைகளில் அடுக்கி லாரிகள் மூலம் கேரள மாநிலம் மற்றும் மதுரை காய்கறி மார்க்கெட்டிற்கு கொண்டு செல்கின்றனர். தற்போது முட்டைகோஸ் ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை ஆகிறது. இதற்கிடையே இன்னும் கூடுதல் விலை கிடைக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


Related Tags :
Next Story