வெவ்வேறு சம்பவங்களில்தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் தற்கொலை
வெவ்வேறு சம்பவங்களில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
தனியார் நிறுவன ஊழியர் சாவு
தேனி அன்னஞ்சி முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வேந்திரன் (வயது 37). தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் கடந்த 15-ந்தேதி வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அல்லிநகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பெண் தற்கொலை
உத்தமபாளையம் அருகே உ.அம்மாபட்டி மந்தை குளம் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி முருகேஷ்வரி (48). இந்த தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவர்கள் இருவரும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இவர்களது திருமணத்தி்ற்கு முருகேஸ்வரி கடன் வாங்கி உள்ளார். இந்த கடனை கொடுத்தவர்கள் திருப்பி கேட்டனர். கடனை செலுத்த முடியாமல் முருகேஷ்வரி மனவேதனையில் இருந்து வந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது அவர் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றனார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.