திண்டுக்கல்லில் கனமழைக்கு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது


திண்டுக்கல்லில்  கனமழைக்கு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது
x
தினத்தந்தி 24 Oct 2022 12:15 AM IST (Updated: 24 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் கனமழைக்கு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது

திண்டுக்கல்


திண்டுக்கல் அனுமந்தன்நகர் புதுத்தெருவை சேர்ந்தவர் லில்லிசவுந்திரம் (வயது 56). இவரது கணவர் இறந்துவிட்டார். லில்லிசவுந்திரம், தனது மகன் சுரேஷ், மருமகள் லூர்துமேரி, பேரன், பேத்தி, மற்றொரு மகன் ஆல்வின் ஆல்பர்ட் ஆகியோருடன் வசித்து வருகிறார். கடந்த சில தினங்களாக திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு லில்லிசவுந்திரம் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து வெளிப்புறமாக விழுந்தது. இதனால் வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் கிழக்கு வருவாய் ஆய்வாளர் அழகுமலை, பாலகிருஷ்ணாபுரம் வி.ஏ.ஓ அரவிந்த் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.



Next Story