மாவட்ட அளவிலான ஆக்கி போட்டியில்காஜாமியான் பள்ளி சாம்பியன்
மாவட்ட அளவிலான ஆக்கி போட்டியில் காஜாமியான் பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது
திருச்சி
தேசிய விளையாட்டு தினத்தையொட்டி எஸ்.டி.ஏ.டி.யும், ஆக்கி திருச்சி சங்கமும் இணைந்து மாவட்ட அளவிலான ஆக்கி போட்டியை திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் நேற்று நடத்தியது. இதில் 5 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதன் இறுதி போட்டியில் காஜாமியான் பள்ளியும், ஆர்.சி. பள்ளியும் பலப்பரீட்சை நடத்தின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி விளையாடிய காஜாமியான் பள்ளி இதில் 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் மத்திய கலால்வரித்துறை சூப்பிரண்டு கருணாகரன், ஆக்கி திருச்சி சங்கத்தின் செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை மற்றும் பதக்கங்களை வழங்கினர்.
Related Tags :
Next Story