எல்லீஸ்நகர், ஆனையூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
பராமரிப்பு பணி காரணமாக எல்லீஸ்நகர், ஆனையூர் பகுதிகளில் நாளை(செவ்வாய்க்கிழமை) மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
மதுரை,
பராமரிப்பு பணி காரணமாக எல்லீஸ்நகர், ஆனையூர் பகுதிகளில் நாளை(செவ்வாய்க்கிழமை) மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
பராமரிப்பு பணி
மதுரை எல்லீஸ்நகர், ஆனையூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை(செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் இந்த துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.
அதன்படி எல்லீஸ்நகர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட எல்லீஸ் நகர் மெயின் ரோடு, டி.என்.எச்.பி. அபார்ட்மெண்ட்(எம்.எச்.டி, ஆர்.எச். பிளாக்), டி.என்.எஸ்.சி.பி. அபார்ட்மெண்ட்(ஏ முதல் எச் பிளாக்), போடி லைன், கென்னட் கிராஸ்ரோடு, கென்னட் ஆஸ்பத்திரி ரோடு, மஹபூப்பாளையம், அன்சாரி நகர் 1-வது தெரு முதல் 7-வது தெரு வரை, டி.பி. ரோடு, ரெயில்வே காலனி, வைத்தியநாதபுரம், சர்வோதயா தெருக்கள், சித்தாலாட்சி நகர், ஹப்பி ஹோம் 1, 2-வது தெரு, எஸ்.டி.சி. ரோடு முழுவதும், பைபாஸ் ரோடு ஒரு பகுதி, பழங்காநத்தம் சில பகுதிகள், சுப்பிரமணியபுரம் போலீஸ் நிலையம், வசந்த நகர், ஆண்டாள் புரம் அக்ரிணி அபார்ட்மெண்டஸ், பெரியார் பஸ் நிலையம், ஆர்.எம்.எஸ்.ரோடு, மேல வெளி வீதி, மேல மாரட் வீதி, மேலபெருமாள் மேஸ்திரி வீதி, டவுன் ஹால் ரோடு, காக்கா தோப்பு, மல்லிகை வீதி மற்றும் மேல மாசி வீதி பிள்ளையார் கோவில் வரை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை மின் செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.
ஆனையூர்
ஆனையூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பாலமேடு மெயின் ரோடு, சொக்கலிங்க நகர் 1-வது தெரு முதல் 7-வது தெரு வரை, பெரியார் நகர், அசோக் நகர், புது விளாங்குடி, கூடல் நகர், ஆர்.எம்.எஸ். காலனி, சொக்கநாதபுரம், ராஜ்நகர், பாத்திமா கல்லூரி, பழைய விளாங்குடி, சக்தி நகர், துளசி வீதி, திண்டுக்கல் மெயின் ரோடு, விஸ்தார குடியிருப்பு, பரவை சந்தை,, கரிசல்குளம், அகில இந்திய வானொலி நிலையம், பாசிங்காபுரம், வாகைக்குளம், கோவில் பாப்பாகுடி பிரிவு, லெட்சுமி புரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை மின் செயற்பொறியாளர் ராஜா உசேன் தெரிவித்துள்ளார்.