ஈரோடு மாவட்டத்தில் வட்டார கல்வி அதிகாரி பதவிக்கான தேர்வை 1,108 பேர் எழுதினர்
ஈரோடு மாவட்டத்தில் வட்டார கல்வி அதிகாரி பதவிக்கான தேர்வை 1,108 பேர் எழுதினர்.
ஈரோடு
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் வட்டார கல்வி அதிகாரி பதவிக்கான எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் தேர்வை எழுதுவதற்காக 1,199 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கான தேர்வு ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, செங்கோடம்பாளையத்தில் உள்ள யு.ஆர்.சி. மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூடம், ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடம் ஆகிய 3 மையங்களில் நடந்தது. இந்த தேர்வை 1,108 பேர் எழுதினர். காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 1.30 மணிக்கு நிறைவடைந்தது.
Related Tags :
Next Story