ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 59 பேருக்கு கொரோனா


ஈரோடு மாவட்டத்தில்  புதிதாக 59 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 24 July 2022 11:06 PM IST (Updated: 25 July 2022 2:28 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 59 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 440 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 61 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இந்தநிலையில் நேற்று புதிதாக 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 33 ஆயிரத்து 777 ஆக உயர்ந்தது. இதில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 684 பேர் குணமடைந்தனர். நேற்று மட்டும் 47 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். தற்போது 359 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை கொரோனாவுக்கு 734 பேர் பலியாகி உள்ளனர்.


Related Tags :
Next Story