ஈரோடு மாவட்டத்தில் 1,597 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்


ஈரோடு மாவட்டத்தில்  1,597 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
x

ஈரோடு மாவட்டத்தில் 1,597 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

ஈரோடு

தமிழகத்தில் கொரோனா 4-வது அலை பரவுவதை தடுக்கும் வகையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இதில், ஈரோடு மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகள், அரசு நகர்ப்புற மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிக்கூடங்கள் உட்பட மொத்தம் 1,597 மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாம் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி, இரவு 7 மணிக்கு நிறைவடைந்தது. காலை முதலே தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வத்துடன் முகாம்களுக்கு வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

இதில் 12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள், 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் முதல் தவணை, 2-வது தவணை தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டது. மேலும் ஏற்கனவே 2 தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு 3-வது தவணையாக பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பழையபாளையம் அரசு நகர்ப்புற சுகாதார நிலையத்தில் நடந்த தடுப்பூசி முகாமை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


Next Story