ஈரோடு, கோபி மதுவிலக்கு பிரிவுகளில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் 20 பேர் பணி இடமாற்றம்
ஈரோடு, கோபி மதுவிலக்கு பிரிவு போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் 20 பேரை பணி இடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டு உள்ளார்.
ஈரோடு, கோபி மதுவிலக்கு பிரிவு போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் 20 பேரை பணி இடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டு உள்ளார்.
மது விலக்கு பிரிவு
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபிசெட்டிபாளையம் ஆகிய இடங்களில் மது விலக்கு பிரிவு போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீசார் ஒரு ஆண்டுக்கு ஒருமுறை பணி இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
கடந்த 7-ந் தேதி பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வந்த 6 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட மொத்தம் 38 போலீசார் ஈரோடு, கோபி மது விலக்கு பிரிவு போலீஸ் நிலையங்களுக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.
21 போலீசார்
இந்த நிலையில் ஈரோடு, கோபி ஆகிய மதுவிலக்கு பிரிவு போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வந்த 20 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட மொத்தம் 21 போலீசாரை பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கு பணி இடமாற்றம் செய்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார். அதன்படி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வெள்ளியங்கிரி, வடிவேல், கந்தசாமி, ஜெகநாதன், ரவி, கலைச்செல்வி, ரேணுகா, அமுதா, சுரேஷ்குமார், செந்தில்குமார், மோகன்ராஜ், கே.செந்தில்குமார், ரவிச்சந்திரன், அமுதா, வேளாங்கன்னி, எல்.ரவிச்சந்திரன், வரதராஜன், நாராயணன், சுப்பிரமணியம், கருப்புசாமி ஆகிய 20 பேர் பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கு மாற்றப்பட்டனர். இதேபோல் போலீஸ் ஜீப் டிரைவரான ராஜா ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.