ஈரோடு, கோபி பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை
ஈரோடு, கோபி பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
ஈரோடு
கோபியில் நேற்று மாலை நேரத்தில் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தன. இந்த நிலையில் இரவு 7.30 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதேபோல் மொடச்சூர், கரட்டூர், நாயக்கன் காடு, பாரியூர் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளிலும் மழை பெய்தது.
இதேபோல் ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று இரவு 8 மணி அளவில் மழை தூறல் போட ஆரம்பித்தது. பின்னர் சிறிது நேரத்தில் இடி-மின்னலுடன் மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. மழை காரணமாக மாநகர் பகுதியில் இரவில் குளிர்ந்த காற்று வீசியது.
Related Tags :
Next Story