ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில்தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டம்


ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில்தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டம்
x

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் தனியார் நிறுவனத்தின் சார்பில் தூய்மை பணி, ஹவுஸ் கீப்பிங், காவலாளி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்துள்ள தினக்கூலியான ரூ.707 வழங்க கோரி பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கடந்த 10-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் மேலாளர் வினோத் பேச்சுவார்த்தை நடத்தி, பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என்றும், ஜனவரி மாத ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

ஆனால் அவர் அறிவித்தபடி பணியும், ஊதியமும் வழங்கப்படவில்லை என்றுகூறி நேற்று இரவு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட தொடங்கி உள்ளனர்.


Related Tags :
Next Story