தூத்துக்குடி பத்திர பதிவு அலுவலகம் முன்பு மூதாட்டி தர்ணா போராட்டம்


தூத்துக்குடி பத்திர பதிவு அலுவலகம் முன்பு மூதாட்டி தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 14 Jun 2023 6:45 PM GMT (Updated: 15 Jun 2023 10:09 AM GMT)

தூத்துக்குடி பத்திர பதிவு அலுவலகம் முன்பு மூதாட்டி தர்ணா போராட்டம் நடத்தினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் மோசடியாக விற்க முயற்சி செய்யப்படும் தனது நிலத்தை மீட்டுத் தரக்கோரி நேற்று பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு மூதாட்டி தர்ணா போராட்டம் நடத்தினார்.

நிலம் அடமானம்

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரத்தை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மனைவி தெய்வானை (வயது 71). இவரது பெயரில் முத்தையாபுரம் பகுதியில் 3 செண்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை தனது பேரன் உடல்நிலை பாதிக்கப்பட்டபோது, அடமானம் வைத்து பணம் பெற்று சிகிச்சை செய்தாராம். இந்த நிலையில் அந்த நிலத்தின் பத்திரத்தை திரும்ப பெற முயன்றபோது, அந்த நிலத்தை திருப்பி கொடுக்காமல் அடமான கடன் வழங்கியவரும், தெய்வானையின் உறவினரும் சேர்ந்து அந்த நிலத்தை மோசடி செய்ய முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

தர்ணா போராட்டம்

இதனால் தெய்வானை நிலத்தை மீட்டுத்தரக் கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். தொடர்ந்து வயதானவர்களை ஏமாற்றி நிலத்தை அபகரிப்பதை தடுக்க வேண்டும், வயதானவர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு பேனரை பிடித்தபடி தெய்வானை திடீர் போராட்டம் நடத்தினார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story