கயத்தாறு பேரூராட்சி பகுதியில்ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் வாறுகால்,சாலை அமைக்கும் பணி தொடக்கம்
கயத்தாறு பேரூராட்சி பகுதியில் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் வாறுகால், சாலை அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.
கயத்தாறு:
கயத்தாறு பேரூராட்சி மாதாகோவில் தெருவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தொகுதிமேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சத்தில் வாறுகால் மற்றும் சிமெண்டு சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது. இப்பணியை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவைசெயலாளர் செ. செல்வகுமார், கயத்தாறு ஒன்றிய மாணவரணி செயலாளர் நவநீதகண்ணன், கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் கருப்பசாமி, நகர துணைச் செயலாளர் தங்கபாண்டியன், மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து அகிலாண்டபுரம் பஞ்சாயத்து சத்திரப்பட்டி கிராமத்தில் வேதக்கோவில் தெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.9 லட்சத்து ஆயிரம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.