கோபி கூட்டுறவு சங்கத்தில் ரூ.7½ லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
கோபி கூட்டுறவு சங்கத்தில் ரூ.7½ லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம் போனது.
ஈரோடு
கடத்தூர்
கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற வாழைப்பழ ஏலத்துக்கு 4 ஆயிரத்து 520 வாழைத்தார்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் கதலி வாழைப்பழம் கிலோ ஒன்று 42 ரூபாய்க்கும், நேந்திரன் வாழைப்பழம் 23 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. பூவன் (தார் ஒன்று) ரூ.400-க்கும், தேன்வாழை ரூ.580-க்கும், செவ்வாழை ரூ.680-க்கும், பச்சை நாடன் ரூ.340-க்கும், ரொபஸ்டா ரூ.310-க்கும், மொந்தன் ரூ.230-க்கும், ரஸ்தாளி ரூ.420-க்கும் என வாழைத்தார் ரூ.7 லட்சத்து 47 ஆயிரத்துக்கு ஏலம் போனது.
இதேபோல் 5 ஆயிரத்து 60 தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில் சிறிய தேங்காய் ஒன்று 9 ரூபாய்க்கும், பெரிய தேங்காய் ஒன்று 15 ரூபாய் 40 காசுக்கும் என மொத்தம் ரூ.63 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
Related Tags :
Next Story