கோபி, நம்பியூரில்வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
கோபி, நம்பியூரில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினாா்கள்.
நம்பியூர் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நம்பியூர் வட்டார கிளை தலைவர் ரகு ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வட்டார கிளை செயலாளர் கருப்புசாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். கள்ளக்குறிச்சி தாசில்தார் மனோஜ் முருகன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதை உடனே ரத்து செய்யவேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் சர்வன்குமார் ஜடாவத்தின் ஊழியர் விரோத நடவடிக்கையை கண்டிப்பது உள்ளிட்ட காரணங்களை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு வருவாய்த்துறை ஊழியர் சங்க கிளைச் செயலாளர் பரமசிவம், வட்டார கிளை பொருளாளர் கார்த்திக்ராஜா உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதேபோல் கோபி தாலுகா அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் மற்றும் ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ.வை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட துணை தலைவர் ரஜ்குமார் தலைமையில் நடந்தது.