கோபியில் ரூ.5¾ லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை


கோபியில் ரூ.5¾ லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை
x

கோபியில் ரூ.5¾ லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனையானது.

ஈரோடு

கடத்தூர்

கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாழைத்தார் ஏலம் நடைபெற்றது. இதில் கதலி ரகம் கிலோ ரூ.40-க்கும், நேந்திரம் ரூ.38-க்கும் ஏலம் போனது. பூவன் (தார்) ரூ.470-க்கும், தேன்வாழை ரூ.590-க்கும், செவ்வாழை ரூ.890-க்கும், ரஸ்தாலி ரூ.510-க்கும், மொந்தன் ரூ.310-க்கும், பச்சைநாடன் ரூ.450-க்கும் விலை போனது. வாழைத்தார் மொத்தம் ரூ.5 லட்சத்து 77 ஆயிரத்துக்கு விற்பனையானது.


Related Tags :
Next Story