கோபியில் குப்பைக்கிடங்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
கோபியில் குப்பைக்கிடங்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தொிவித்தனா்
கோபி நகராட்சிக்குட்பட்ட 2-வது வார்டு பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மின் மயானம் உள்ளது. இதுபோக மீதமுள்ள நிலத்தில் நகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை உரக்கிடக்கு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.இந்த நிலையில் குப்பை கிடங்கு அருகே ரூ.13 லட்சத்தில் நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் உலர் குப்பைகளை சேமித்து வைப்பதற்காக கிடங்கு ஒன்று அமைக்க பூமி பூஜை நடைபெறுவதாக இருந்தது. இதுகுறித்து அறிந்ததும் மின்மயானத்தின் முன்பு பொதுமக்கள் திரண்டனர். பின்னர் அங்கு குப்பைக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.இதுகுறித்த தகவல் கிடைத்ததும் கோபி போலீசார் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது போலீசார் கூறும்போது, 'இந்த பகுதியில் புதிதாக குப்பைக்கிடங்கு அமைக்கப்படாது' என்றனர். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் குப்பைக்கிடங்கு அமைக்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.