அரசு பள்ளியில், சுற்றுச்சூழல் மன்றம் தொடக்கம்


அரசு பள்ளியில், சுற்றுச்சூழல் மன்றம் தொடக்கம்
x

அரசு பள்ளியில், சுற்றுச்சூழல் மன்றம் தொடங்கப்பட்டது.

கரூர்

உப்பிடமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று பள்ளி சார்பில் சுற்றுச்சூழல் மன்றம் தொடங்கப்பட்டது. இந்த சுற்றுச்சூழல் மன்ற தொடக்க விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் கன்னியப்பன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் வேலுசாமி கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டுவைத்து, மாணவர்களுக்கு மன்ற செயல்பாடு மற்றும் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதில் பள்ளியின் வேதியியல் ஆசிரியர் தனபாண்டியன், உடற்கல்வி ஆசிரியர் மகாமுனி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன் நன்றி கூறினார்.


Next Story