கூடலூரில் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு


கூடலூரில்  கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு
x

கூடலூரில் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது

தேனி

கூடலூர், கம்பம், உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம் ஆகிய பகுதி மக்களுக்கு லோயர்கேம்பில் உள்ள கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படும். இதற்கு தனித்தனியாக குடிநீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டு அங்கிருந்து குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வரப்படுகிறது. இந்நிலையில் தற்போது கூடலூர்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்க பணிக்காக சாலையை பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.

இதில் கூடலூர் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி அருகே நேற்று சாலையை தோண்டும் பணி நடந்தது. அப்போது கோம்பை, பண்ணைப்புரம் பகுதிக்கு செல்லும் லோயர்கேம்ப் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதில் தண்ணீர் வீணாகி ஆறாக சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. எனவே அடிக்கடி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி செல்வதை தடுக்க மாவட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story