தேனியில் தாய்-மகன் மீது தாக்குதல்: தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் தலைவர் மீது வழக்கு
தேனியில் தாய்-மகன் மீது தாக்குதல் நடத்திய தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்
தேனி
தேனி கம்போஸ்ட் ஓடைத்தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 49). இவர் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைவராக உள்ளார். இவர், பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் கருவேல்நாயக்கன்பட்டியை சேர்ந்த பரசுராமன் (33), அவருடைய தாய் வனிதா ஆகியோரை தேனி கலெக்டர் அலுவலகம் அருகில், தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பரசுராமன் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் முருகன் மீது தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இந்த கொடுக்கல், வாங்கல் தொடர்பான தகராறில் தன்னை தாக்கியதாக முருகன் கொடுத்த புகாரில், பரசுராமன், வனிதா மீது தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story