தேனியில்காவடி ஊர்வலத்தில் வாலிபர் மீது தாக்குதல்


தேனியில்காவடி ஊர்வலத்தில் வாலிபர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 16 April 2023 12:15 AM IST (Updated: 16 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் காவடி ஊர்வலத்தில் வாலிபர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி

தேனி அல்லிநகரத்தில் இருந்து பங்களாமேடு பகுதிக்கு கோவில் திருவிழாவையொட்டி காவடியுடன், சாமி ஊர்வலம் நடந்தது. இரவில் இந்த ஊர்வலம் பங்களாமேடு பகுதிக்கு வந்தது. அப்போது ஊர்வலத்தில் சிலர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஊர்வலத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த ஆண்டிச்சாமி மகன் சரவணன் (வயது 22) என்பவரை சிலர் தாக்கினர். இதில் அவர் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

ஊர்வலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், தகராறில் ஈடுபட்ட நபர்களை விரட்ட முயன்றனர். ஆனால் அவர்கள் போலீசாரிடமும் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தகராறில் ஈடுபட்டவர்களை போலீசார் துரத்தினர். காயம் அடைந்த சரவணன் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story