தேனியில் மல்லிகை பூ கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை


தேனியில்  மல்லிகை பூ கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை
x

தேனி பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனையானது.

தேனி

தேனி பூ மார்க்கெட்டுக்கு மாவட்டத்தின் பல ஊர்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் மல்லிகை பூ சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வரத்து குறைந்து கடந்த சில நாட்களாகவே மல்லிகை பூ விலை உயர்ந்து வந்தது. இந்நிலையில் நாளை (வியாழக்கிழமை) ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தேனி பூ மார்க்கெட்டில் இருந்து கேரளாவுக்கு இன்று அதிக அளவில் பூக்கள் அனுப்பப்பட்டன. அதே நேரத்தில் மல்லிகை பூ சுமார் 100 கிலோ அளவில் தான் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்தது. இதனால் விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. விலை உயர்ந்த போதிலும் வியாபாரிகள் மல்லிகை பூக்களை வாங்கி சென்றனர். அதே நேரத்தில் மற்ற பூக்களின் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை.


Next Story