தேனியில்ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் ஆஸ்பத்திரியில் அனுமதி


தேனியில்ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் ஆஸ்பத்திரியில் அனுமதி
x
தினத்தந்தி 24 Feb 2023 12:15 AM IST (Updated: 24 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் அனுமதிக்கப்பட்டார்.

தேனி

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் (வயது 95). அவருக்கு வயது முதுமையால் நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் பெரியகுளத்தில் இருந்து தேனி என்.ஆர்.டி. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் நேற்று தனது தாயாருக்கு சிகிச்சை அளிக்கப்படும் ஆஸ்பத்திரிக்கு வந்தார். சிகிச்சை பெற்று வரும் தாயாரை பார்வையிட்டார். அவரது உடல் நிலை குறித்து டாக்டர்களிடம் விசாரித்தார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அவருடைய தாயாருக்கு தொடர்ந்து டாக்டர்களின் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Related Tags :
Next Story