தேனியில்வாலிபரிடம் நகை-பணம் வழிப்பறி


தேனியில்வாலிபரிடம் நகை-பணம் வழிப்பறி
x
தினத்தந்தி 24 April 2023 12:15 AM IST (Updated: 24 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் வாலிபரிடம் நகை-பணத்தை வழிப்பறி செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி

தேனி சிவாஜி நகரை சேர்ந்தவர் கிஷோக் (வயது 32). கடந்த 21-ந்தேதி இவர், நெல்லையில் இருந்து பஸ்சில் வந்து தேனி புதிய பஸ் நிலையத்தில் இறங்கினார். பின்னர் அவர் தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி கிஷோக் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலி மற்றும் ரூ.8 ஆயிரத்து 330-யை பறித்து விட்டு தப்பி ஓடினார். இதுகுறித்து அவர் தேனி போலீசில் புகாா் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story