தேனியில்கோடை கால இலவச விளையாட்டு பயிற்சி முகாம்:நாளை தொடங்குகிறது


தேனியில்கோடை கால இலவச விளையாட்டு பயிற்சி முகாம்:நாளை தொடங்குகிறது
x
தினத்தந்தி 30 April 2023 12:15 AM IST (Updated: 30 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் கோடை கால இலவச விளையாட்டு பயிற்சி முகாம் நாளை தொடங்கி 15 நாட்கள் நடக்கிறது.

தேனி

விளையாட்டு பயிற்சி

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவில் இலவச கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் நடக்கிறது. இந்த முகாம் நாளை (திங்கட்கிழமை) தொடங்கி 15-ந்தேதி வரை தொடர்ந்து 15 நாட்கள் நடக்கிறது. காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையும் முகாம் நடக்கிறது.

தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, கைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் விளையாட்டு விடுதியில் சேருவதற்கான அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும்.

பெயர் பதிவு

மேலும் பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர்கள் விளையாட்டு விடுதியில் சேருவதற்கு பரிந்துரை செய்யப்படுவார்கள்.

எனவே பயிற்சி முகாமில் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் மாணவரல்லாத விளையாட்டில் ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம். பயிற்சியில் கலந்து கொள்பவர்கள் மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் பெயர் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story