தேனியில்திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது.
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி, திருநங்கைகளிடம் குறைகள் கேட்டார். கூட்டத்தில், அடையாள அட்டை, வீட்டுமனைப்பட்டா, கல்விக்கடன், சுயதொழில் கடன் உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அவர்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
மேலும் கூட்டத்தில் கலெக்டர் ஷஜீவனா பேசும்போது, 'திருநங்கைகளுக்கு அரசு சார்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் வீடு இல்லாத திருநங்கைகள் வீட்டுமனை கேட்டு உரிய ஆவணங்களுடன் மனு கொடுக்கலாம். திருநங்கைகளுக்கு அவர்கள் விரும்பும் இடத்தில் வீட்டுமனை கொடுக்கவும் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். இதில் மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.