தேனியில்கழுத்தை அறுத்து தொழிலாளி தற்கொலை முயற்சி
தேனியில் கழுத்தை அறுத்து தொழிலாளி தற்கொலைக்கு முயன்றார்.
தேனி அருகே உள்ள வாழையாத்துப்பட்டியை சேர்ந்த முருகன் மகன் சித்திரை செல்வன் (வயது 30). இவர் தேனி சுப்பன் தெருவில் உள்ள ஒரு பிளைவுட் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை கடையில் இருந்தபோது, திடீரென அவர் ஒரு கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அங்கிருந்தவர்கள் அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். கழுத்தை அறுத்துக் கொண்டதில் ரத்தம் அதிக அளவில் வெளியேறியது. உடனே அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்ததும் தேனி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி தலைமையில் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் குடும்ப பிரச்சினையால் அவர் தற்கொலைக்கு முயன்றதாக தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.