தேனியில் நீர் பாதுகாப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்: மத்திய ஆய்வுக்குழு அலுவலர்கள் பங்கேற்பு


தேனியில்  நீர் பாதுகாப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்:  மத்திய ஆய்வுக்குழு அலுவலர்கள் பங்கேற்பு
x

தேனியில் நீர் பாதுகாப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் மத்திய ஆய்வுக்குழு அலுவலர்கள் பங்கேற்றனர்

தேனி

தேனி மாவட்டத்தில், ஜல்சக்தி அபியான் இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் பாதுகாப்பு பணிகள் குறித்து அரசு துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி பேசினார். இதில், மத்திய ஆய்வுக்குழு அலுவலர்களான மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சக செயலாளர் அமரேந்திரசிங், தொழில்நுட்ப அலுவலர் ஒய்.ஆர்.பகத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஜல்சக்தி அபியான் இயக்கத்தின் கீழ் தண்ணீரை பாதுகாத்தல் மற்றும் மழைநீரை சேகரித்தல், பாரம்பரியமான நீர்நிலைகள், குளங்களை சீரமைத்தல் போன்ற பணிகள் குறித்தும் ஆய்வு செய்து, துறை அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

மேலும் பள்ளிகள், அரசு அலுவலகங்கள், குடியிருப்புகள், பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் குறித்தும், புதிதாக மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கப்படவுள்ள இடங்களின் எண்ணிக்கை குறித்தும் மத்திய ஆய்வுக்குழு அலுவலர்கள் ஆய்வு செய்தனர். இந்த கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் சமர்த்தா, மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story