வேதாரண்யத்தில், உப்பு உற்பத்தி பாதிப்பு


வேதாரண்யத்தில், உப்பு உற்பத்தி பாதிப்பு
x
தினத்தந்தி 11 July 2023 6:45 PM GMT (Updated: 11 July 2023 6:45 PM GMT)

திடீரென பெய்த மழையால் வேதாரண்யத்தில், உப்பு உற்பத்தி பாதிப்படைந்துள்ளது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:


திடீரென பெய்த மழையால் வேதாரண்யத்தில், உப்பு உற்பத்தி பாதிப்படைந்துள்ளது.

திடீரென பெய்த மழை

வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் சுமார் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. இங்கு ஜனவரி மாதம் முதல் உப்பு உற்பத்தி தொடங்கி செப்டம்பர் மாதம் வரை 6½ லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படும்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு, லாரிகள் மூலம் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நாள்தோறும் அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த 2 வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் உப்பு உற்பத்தி முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் திடீரென்று நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது.

உப்பு உற்பத்தி...

இதனால் உப்பு பாத்திகளில் மழைநீர் தேங்கி உப்பு பாத்திகள் சேதம் அடைந்துள்ளது. இதன் காரணமாக உப்பு உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உப்பள பாத்திகளில் சேமித்து வைத்துள்ள உப்புக்கள் மழை நீரில் கரைந்து வீணாகி உள்ளது. சேமித்து வைத்துள்ள உப்பை தார்ப்பாய், பனைமட்டை கொண்டு பத்திரமாக மூடி வைத்துள்ளனர்.

மீண்டும் உப்பு உற்பத்தி தொடங்க ஒரு வார காலமாகும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். நேற்று ஒரே நாள் இரவில் பெய்த மழையால் உப்பு உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான உப்பள தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.


Next Story