ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டி 37 பேர் காயம்


ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டி 37 பேர் காயம்
x

மணப்பாறை அருகே நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 37 பேர் காயமடைந்தனர்.

திருச்சி

மணப்பாறை அருகே நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 37 பேர் காயமடைந்தனர்.

ஜல்லிக்கட்டு

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த குளத்தூராம்பட்டியில் ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. ஜல்லிக்கட்டை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக ஜல்லிக்கட்டு காளைகளுக்கும், வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தகுதியானவர்கள் மட்டும் ஜல்லிக்கட்டு திடலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து ஜல்லிக்கட்டு உறுதிமொழி வாசித்தனர்.

அதன் பின் ஜல்லிக்கட்டு தொடங்கியது. முதலில் வாடிவாசலில் இருந்து கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

37 பேர் காயம்

இதில் சில காளைகள் வீரர்களிடம் பிடிபட்டன. சில காளைகள் வாடிவாசலில் இருந்து வரும்போது, மிரட்டலுடன் வந்தது. அந்த காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் தப்பி சென்றன. சில காளைகள் களத்தில் நின்று விளையாடி வீரர்களிடம் பிடிபடாமல் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.

இதில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் கட்டில், சைக்கிள், பீரோ, சில்வர் பாத்திரங்கள், வெள்ளி நாணயங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டில் 800 காளைகளும், 292 வீரர்களும் பங்கேற்றனர். இதில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 37 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு ஜல்லிக்கட்டு திடல் அருகே அமைக்கப்பட்டு இருந்த முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயமடைந்த 3 பேர் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் ஏற்பாடாமல் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமார் மேற்பார்வையில் மணப்பாறை போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

1 More update

Next Story