கடமலைக்குண்டு பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
கடமலைக்குண்டு பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
தேனி
பெரியகுளம்,
பெரியகுளம் மின் கோட்ட பராமரிப்பில் உள்ள கடமலைக்குண்டு துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி, துரைசாமிபுரம், ஆத்தங்கரைப்பட்டி, நரியூத்து, ராஜேந்திராநகர், வருசநாடு, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, தங்கம்மாள்புரம், பாலூத்து, குமணன்தொழு, சிறைப்பாறை, மந்திசுனை, வாலிப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை பெரியகுளம் மின்வாரிய செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்தார்.
Related Tags :
Next Story