கழுகுமலை-கடம்பூரில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
கழுகுமலை-கடம்பூரில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
கழுகுமலை:
கழுகுமலை, கடம்பூரில் தி.மு.க. அரசை கண்டித்து நடந்த அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டங்களில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ.கலந்து கொண்டார்.
தி.மு.க. அரசை கண்டித்து...
கழுகுமலை காந்தி மைதானத்தில் விலைவாசி உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு போன்றவற்றை கண்டித்தும், இவற்றை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கழுகுமலை நகர செயலாளர் முத்துராஜ், நகர இளைஞரணி செயலாளர் கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு ஸ்ரீதர், மாவட்ட ஜெயலலிதா பேரவை அவைத் தலைவர் மாரியப்பன், மாவட்ட வர்த்தக பிரிவு காமராஜ், கோவில்பட்டி நகராட்சி கவுன்சிலர் கவியரசன், செட்டிகுறிச்சி கிருஷ்ணசாமி, கிளை செயலாளர்கள் பாலமுருகன், நாகராஜ், வேலாயுதபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் சுப்புராஜ், வார்டு செயலாளர்கள் மன்மதராஜன், செந்தூர்பாண்டியன், மாரியப்பன், முருகன், மணி, செந்தில்குமார், அருமைநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடம்பூர்
கடம்பூரில் விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் தலைமை தாங்கினார். இதில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செ.செல்வகுமார். கடம்பூர் நகர பேரவை செயலாளர் மோகன், நகரச் செயலாளர் வாசமுத்து மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கயத்தாறு
கயத்தாறு பேரூராட்சி அலுவலகம் முன்பு தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் செல்வகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர செயலாளர் கப்பல்ராமசாமி முன்னிலை வகித்தார். இதில் மாணவர் அணி ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பாலகணேசன் மற்றும் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.