கள்ளக்குறிச்சியில் கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கள்ளக்குறிச்சியில்  கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Dec 2022 6:45 PM GMT (Updated: 8 Dec 2022 6:46 PM GMT)

கள்ளக்குறிச்சியில் கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும், கரும்பு விவசாயிகளின் பெயரில் சர்க்கரை ஆலைகள் வாங்கிய கடன் தொகை ரூ.300 கோடியை ஆலை நிர்வாகமே ஏற்றுக்கொள்ள வேண்டும். விவசாயிகள் வாங்கிய கடனில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கள்ளக்குறிச்சி -2 கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் குருநாதன் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் பலராமன், ஜோதிராமன் சாந்தமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக அகில இந்திய துணை பொதுச்செயலாளர் கிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் நடராஜன், மாநில துணை செயலாளர் துரைராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள். இதில் அகில இந்திய துணை தலைவர் கிரிஜா, கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேல்மாறன், மாவட்ட தலைவர் ஏழுமலை, மாவட்ட செயலாளர் ஸ்டாலின்மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், வட்ட செயலாளர் அருள்தாஸ் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெறும் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 35-வது மாநாட்டிற்கு நாகை மாவட்டம் கீழ்வெண்மணியில் இருந்து வெண்மணி தியாகிகள் ஜோதி பயண குழுவிற்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நான்கு முனை சந்திப்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.


Next Story