கஸ்பாபேட்டையில்பால் விலையை உயர்த்தக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


கஸ்பாபேட்டையில்பால் விலையை உயர்த்தக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x

பால் விலையை உயர்த்தக்கோரி கஸ்பாபேட்டையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு

சோலார்

பால் விலையை உயர்த்தக்கோரி கஸ்பாபேட்டையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பால் விலையை உயர்த்த வேண்டும்

ஈரோடு மாவட்டத்தில் அந்தந்த பகுதியில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சாா்பில் விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் வாங்கப்படுகிறது. அவ்வாறு வாங்கப்படும் பசு மாட்டு பாலுக்கு லிட்டா் ஒன்றுக்கு ரூ.28 முதல் ரூ.30 வரையும், எருமை பால் லிட்டா் ஒன்று ரூ.40-க்கும் வழங்கப்படுகிறது.

இந்த விலை பால் உற்பத்தியாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் கட்டுப்படி ஆகவில்லை என கூறப்படுகிறது. மேலும் வரவை விட செலவுகள் அதிகமாக உள்ளது. ஆனால் தனியார் நிறுவனம் பசு மாடு பாலை லிட்டர் ஒன்று 35 ரூபாய்க்கும், எருமை பால் 45 ரூபாய்க்கும் வாங்குகிறது. எனவே பசு மாட்டு பாலுக்கு லிட்டருக்கு ரூ.42-ம், எருமை மாட்டு பாலுக்கு ரூ.52-ம் உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது.

ஆர்ப்பாட்டம்

ஆனால் பால் விலை இதுவரை உயர்த்தப்படவில்லை. பாலுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் தங்களுடைய மாடுகளை விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். எனவே பால் விலையை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் பால் விலையை உயர்த்தி வழங்க கோரி சோலார் அருகே உள்ள கஸ்பாபேட்டை ஊராட்சி செல்லப்பம்பாளையம் பகுதியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு அசோக் தலைமை தாங்கினார்.

இதில் கலந்து கொண்ட விவசாயிகள் பால் விலையை உயர்த்த வழங்கி கோரி கோஷங்கள் எழுப்பினர்.


Related Tags :
Next Story