கவுந்தப்பாடியில் வீடுகளுக்குள் புகுந்து குரங்குகள் அட்டகாசம்
கவுந்தப்பாடியில் வீடுகளுக்குள் புகுந்து குரங்குகள் அட்டகாசம் செய்தன.
ஈரோடு
கவுந்தப்பாடி
கவுந்தப்பாடி பகுதியில் 2 குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இந்த குரங்குகள் கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரியின் பின்புறம் உள்ள வீடுகளில் புகுந்து அட்டகாசம் செய்வதுடன், வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் உணவுப்ெபாருட்களையும் தூக்கி சென்றுவிடுகின்றன. மேலும் கோழி முட்டைகளை எடுத்து உடைத்து நாசம் செய்து விடுகின்றன. கடந்த 1 மாதத்துக்கும் மேலாக இந்த 2 குரங்குகள் அட்டகாசம் செய்து வருகின்றன. அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story