காயல்பட்டினத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
காயல்பட்டினத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினத்தில் பள்ளி மாணவி ஒருவரிடம் செல்போனில் பேசியதை, மாணவியின் பாட்டி கண்டித்ததால் மனமுடைந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வாலிபர்
காயல்பட்டினம் சுலைமான் நகரை ேசர்ந்த முகமது அப்துல் காதர் மகன் ஷேக் சிந்தா (வயது 48). இவர் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மூத்த மகன் முகமது அபுர்தீன் (22). இவர் அங்குள்ள ஒரு இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் சில நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவி ஒருவரிடம் செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. இதை அறிந்த அந்த மாணவியின் பாட்டி, முகமது அபுர்தீன் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் இருந்த முகமது அபுர்தீன் தாயாரிடம், மகனை கண்டித்து வைக்குமாறு கூறிவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த முகமது அபுர்தீனிடம் தாயார் கூறி, கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த அவர் , பக்கத்து பகுதியில் வசிக்கும் தனது தங்கை ரம்ஜான் பாத்திமாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
தூக்கில் தொங்கினார்
அங்கு தனக்கு தூக்கம் வருவதாக கூறிவிட்டு, மாடிக்கு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் ரம்ஜான் பாத்திமா வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று பொருள்கள் வாங்கிவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர், உறவினர் மூலம் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். வீட்டிக்குள் சென்ற அவர்கள் மாடிப்பகுதிக்கு சென்றபோது, அங்கு முகமது ஆஸ்பெட்டாஸ் செட்டுக்காக போடப்பட்ட கம்பியில் தூக்கு போட்டு முகமது அபுர்தீன் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
போலீசார் விசாரணை
பதறிப்போன உறவினர்கள் அவரை மீட்டு காயல்பட்டினத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனரே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இது சம்பவம் அறிந்து ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.