காயல்பட்டினத்தில்சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் சிக்கினார்


காயல்பட்டினத்தில்சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் சிக்கினார்
x
தினத்தந்தி 17 Jan 2023 12:15 AM IST (Updated: 17 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காயல்பட்டினத்தில் சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

காயல்பட்டினம் சிங்கிதுறையை சேர்ந்த பெட்ரிக் மகன் அந்தோணி சாட்பீக் (வயது 19). மீனவரான இவர், அங்குள்ள கொட்டகைக்கு 3 வயது குழந்தையை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அவரது பெற்றோர் அங்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டனர். அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாராம். இச்சம்பவம் குறித்து குழந்தையின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அந்தோணி சாட்பீக்கை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.


Next Story