கயத்தாறில் பஸ் கண்டக்டர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
கயத்தாறில் பஸ் கண்டக்டர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி
கயத்தாறு:
கோவில்பட்டி கூசாலிபட்டியை சேர்ந்த கணேசன் மகன் குருராஜ் (வயது33). இவருக்கு திருமணமாகி விட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது மனைவி மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட குருராஜ் மதுவுடன் விஷம் கலந்து குடித்துவிட்டு புதிய பஸ் நிலையத்தில் மயங்கி கிடந்துள்ளார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story