கயத்தாறில்மனிதநேய மக்கள் கட்சியினர்கண்டன ஆர்ப்பாட்டம்
கயத்தாறில் மனிதநேய மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தூத்துக்குடி
கயத்தாறு:
மணிப்பூரில் கிறிஸ்தவ ஒரு சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து நேற்று கயத்தாறில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அஸ்மத் உசேன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு் கட்சி கயத்தாறு ஒன்றிய செயலாளர் சாலமோன் ராஜா, தமிழ் புலிகள் கட்சி மாவட்டச் செயலாளர் வீரபெருமாள், கயத்தாறு பேரூர் செயலாளர் சுரேஷ்கண்ணன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் கிதிர் பிஸ்மி உட்பட பலர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
Related Tags :
Next Story