கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம் அனுசரிப்பு
கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
தூத்துக்குடி
கயத்தாறு:
கயத்தாறில் சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 233-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு அவர் தூக்கிலிடப்பட்ட இடத்தில் உள்ள மணிமண்டபத்தில் உருவச்சிலைக்கு கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் கயத்தாறு தாசில்தார் சுப்புலட்சுமி, இன்ஸ்பெக்டர் முத்து, வருவாய் ஆய்வாளர் நேசமணி, கிராம நிர்வாக அலுவலர் சுப்பையா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு கட்டபொம்மனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Related Tags :
Next Story